பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமோ அல்லது அதற்கான நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
Published on
Updated on
1 min read

இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏற்பட்டு இன்றோடு முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்ட மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமோ அல்லது அதற்கான நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் ஆயுதமேந்தி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்றோடு முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்ட மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமோ அல்லது அதற்கான நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
ரே பரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

மே 3, 2023 மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்றோடு முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்டன; இன்னும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்லவதற்கு விருப்பமோ அல்லது அதற்கான

நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை போலும்.

மணிப்பூா் வன்முறையில் பிப்ரவரி 2024 வரை 219 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்கின்றனர். வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள் - கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மாநிலம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிர்வாகங்கள் உள்ளன.ஒன்று மைதேயிக்கு மைதேயி,

மற்றொன்று குகிக்கு குகி என பிரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் இன்னமும் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் மேம்போக்காக ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அதன் அதிகாரம் முக்கியமாக மைதேயி மக்கள் வசிக்கும் இம்பாலுக்கு அப்பால் செயல்படவில்லை.

பாஜகவின் உறுதியான 'கிழக்கில் செயல்படும்' கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 'கிழக்கைப் பார்' கொள்கையை விட முன்னேற்றம் என்று கூறப்பட்டது. இருப்பினும், மோடியின் அரசாங்கம் மணிப்பூரின் திசையைப் பார்க்கவோ அல்லது பதற்றமான மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355-ஆவது பிரிவு முடமாக உள்ளது. அரசியலமைப்பின் 356-ஆவது பிரிவு துருப்பிடித்து வருகிறது. திறமையற்ற மற்றும் மதிப்பிழந்த அரசாங்கம், பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட பெருமைமிக்க அரசை தொடர்ந்து வழிநடத்துகிறது. இதற்கிடையில், மணிப்பூர் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர்.

மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன் என சிதம்பரம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com