25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

25 ஆயிரம் ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் ரத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று (மே 7) உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் புலனாய்வுத் துறை விசாரணையை தொடரலாம் எனவும், விசாரணை முடியும்வரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிட தேர்வு மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களை ரத்து செய்து கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.

சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்கவும் உத்தரவிட்டப்பட்டது.

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மேற்கு வங்கவங்க பள்ளி சேவை வாரியம் சார்பில் வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, மேற்கு வங்க அரசு சார்பில் வழக்குரைஞர் நீரஜ் கிருஷ்ணன் ஆகியோர் வாதாடினர்.

அனைத்துத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, அரசுப் பணி நியமனங்களில் மோசடி நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும், அதனை எப்படி எதிர்கொள்வீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.

மேலும், ஆசிரியர்கள் அல்லது மேற்கு வங்க அதிகாரிகளுக்கு எதிராக எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும், 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

ஆசிரியர்கள் நியமன விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரமளித்து, அதுவரை ஆசிரியர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com