மே 7: மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற தொகுதிகளின் நிலைமை பற்றி...
உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் வாக்களித்த பின் மையிட்ட விரல்களைக் காட்டும் பெண்கள்...
உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் வாக்களித்த பின் மையிட்ட விரல்களைக் காட்டும் பெண்கள்...பி.டி.ஐ.

நாட்டின் அடுத்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு இன்று மே 7 செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடந்துமுடிந்திருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும் வெற்றிகளைத் தந்த பகுதிகளில்தான் இன்றைய வாக்குப் பதிவு நடைபெற்றது.

முக்கியமான இந்த மூன்றாவது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் 79 தொகுதிகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் இருப்பவை, இவற்றைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆளும் கூட்டணி.

-

இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற குஜராத்திலுள்ள 26 தொகுதிகளும் (சூரத்தில் போட்டியின்றி பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது) கர்நாடகத்தில் மீதமுள்ள 14 தொகுதிகளும் மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகளும் உத்தரப் பிரதேசத்தில் 10-ல் 9 தொகுதிகளும் மகாராஷ்டிரத்தில் 11-ல் 7 தொகுதிகளும் சத்தீஸ்கரில் 7-ல் 6 தொகுதிகளும் பிகாரிலுள்ள 5 தொகுதிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வசமிருப்பவை.

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் வாக்களித்த பின் மையிட்ட விரல்களைக் காட்டும் பெண்கள்...
சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை 10 தொகுதிகள்தான். மகாராஷ்டிரத்தில் 7-ல் 4, மேற்கு வங்கத்தில் 4-ல் 3, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவாவில் ஒவ்வொன்று.

இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பரவலாக, குஜராத்தைத் தவிர, வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி நம்புகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகௌட பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் ஒளிப்பதிவுகள் வெளியாகிப் பரபரப்பாகி, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 14 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட முடியும் என்றும் இந்தியா கூட்டணி கருதுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் வாக்களித்த பின் மையிட்ட விரல்களைக் காட்டும் பெண்கள்...
வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மூன்றாவது முறையாகப் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்றே பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது. கடந்த தேர்தல்களின் வாக்குகள் விழுந்த விதமும் இதற்கு ஆதரவாகவே இருக்கிறது. காந்திநகரில் மீண்டும் அமித் ஷா போட்டியிடுகிறார்.

ஆட்சியின் மீதுள்ள அதிருப்தி, ராஜ்புத்திரர்களின் கோபம் ஆகியவற்றையெல்லாம் எளிதில் கடந்துவிடலாம் என்றே நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

ஏற்கெனவே வாக்குகளின் சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், கட்சி தாவுதல்கள், கோஷ்டிப் பூசல் எல்லாமும் குஜராத்தில் காங்கிரஸைப் பலவீனப்படுத்தியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார், அஜித் பவார்) இரு பிரிவுகளும் சிவசேனையின் (உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே) இரு பிரிவுகளும் காங்கிரஸுடன் பாரதிய ஜனதாவுடனும் தனித்தனியே பிரிந்து போட்டியிடுகின்றன. மக்கள் யார் பக்கம் என்பதை எளிதில் ஊகிக்க முடியாதிருக்கிறது.

எப்படியென்றாலும் இன்றைய வாக்குப் பதிவு மக்களவைத் தேர்தலின் ஒட்டுமொத்த முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com