வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் தகித்து வருகின்றது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மே 9 வரை அதிகப்படியான வெப்பம் நிலவும் என தெரிவித்துள்ளது.

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

அதிகபட்ச வெப்பநிலை கொல்லம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூரில் 38, கோட்டயம், பத்தனம்திட்டா, கண்ணூரில் 37, மலப்புரம் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது இன்று மே 10 வரை நீட்டிக்கலாம்.

இந்த வெப்பநிலை வழக்கத்தை விட 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com