சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

சாம் பித்ரோடாவின் கருத்து மகாராஷ்டிர மாநில மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா?
சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

சாம் பித்ரோடாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி உடனான உறவை முதல்வர் மு.க. ஸ்டாலின் முறித்துக்கொள்வாரா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

ஆங்கில ஊடகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா அளித்த நேர்காணலில், நாட்டில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்து நாடு முழுவதும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, சாம் பித்ரோடாவின் கருத்து குறித்து காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் சில கேள்விகளை எழுப்பினார்.

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி
மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

இது குறித்து அவர் பேசியதாவது, காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்து கண்டனத்துக்குரியது. நாட்டு மக்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க முடியாது.

தோல் நிறத்தை வைத்து விளையாட அவருக்கு யார் அனுமதி கொடுத்தது. யாரேனும் என்னை இழித்துப் பேசினால், அதனால் நான் கோபம் அடைவதில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவரின் கருத்து என்னை கோபமடையச் செய்துள்ளது. நிறத்தின் மூலம் பலதரப்பட்ட மக்களின் மன உளைச்சலுக்கு காரணமாகியுள்ளார் பித்ரோடா.

பித்ரோடா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தமிழர் பெருமையை காக்கும் வகையிலும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முறித்துக்கொள்ள தயாரா?

சாம் பித்ரோடாவின் கருத்து மகாராஷ்டிர மாநில மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா?

காங்கிரஸ் கட்சி நாட்டை பின்னோக்கி இழுத்துச்செல்லத் துடிக்கிறது. அத்தகையவர்களுடன் சேர்ந்து பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி மாநிலத்திலுள்ள மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தது எனப் பேசினார்.

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி
சாம் பித்ரோடா ராஜிநாமா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com