சாம் பித்ரோடா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பித்ரோடா ராஜிநாமா செய்தார்.
சாம் பித்ரோடா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியை சாம் பித்ரோடா இன்று (மே 8) இரவு ராஜிநாமா செய்தார்.

சாம் பித்ரோடாவின் ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், நாட்டில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக குறிப்பிட்டார். நிறப் பாகுபாடு குறித்த அவரின் இந்த கருத்து நாடு முழுவதும் எதிர்ப்புக்குள்ளானது.

சாம் பித்ரோடா ராஜிநாமா!
சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதனை முற்றிலும் எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், தேர்தல் நேரமோ அல்லது இல்லையோ, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊடகங்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசுவது அவர்களின் கடமையாகும். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி உழைத்துக்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற சர்ச்சைகள் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாம் பித்ரோடா ராஜிநாமா!
சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

மேலும், தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி சாம் பித்ரோடாவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்திய மக்களை இழிவுபடுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டார். மேலும், நிறப் பாகுபாடு குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து, இன உரிமை பேசும் அதன் கூட்டணி கட்சிகள் விலகுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com