சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்தைத் தொடர்ந்து கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!
Sam Pitroda
Sam Pitroda

அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சொத்து வாரிசுரிமை வரி குறித்துப் பேசிய சர்ச்சை ஓய்வதற்குள், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை விளக்க இந்திய நாட்டு மக்களின் நிறங்கள் குறித்து பேசி மாபெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவா் சாம் பித்ரோடா.

தேர்தல் நடைபெறும் நேரத்தில் தலைவர்கள் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகும் நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசி தொடர்ந்து தேர்தல் நேரத்தில் பரபரப்பை உண்டாக்கிவருகிறார் சாம் பித்ரோடா.

ஊடகம் ஒன்றுக்கு சாம் பித்ரோடா அளித்த பேட்டியில், நாட்டு மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள், நாட்டின் கிழக்குப் பகுதி மக்கள் சீனர்களைப் போலவும் மேற்குப் பகுதி மக்கள் அரேபியர்கள் போலவும் வடக்குப் பகுதி மக்கள் வெள்ளையர்கள் போலவும் தெற்குப் பகுதி மக்கள் ஆப்ரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

Sam Pitroda
பிரதமா் மோடியின் பேச்சை திசைதிருப்பவே பிட்ரோடாவின் கருத்தை பாஜக பெரிதாக்குகிறது: காங்கிரஸ்

இந்த பேச்சு சர்ச்சையை உண்டாக்கியதால், இந்த கருத்தை முற்றிலும் எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி விலகியிருக்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பித்ரோடா, கொடுத்த உவமைகள் மிகவும் துரதிருஷ்டவசமானவை, அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உவமைகளிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலும் விலகிக் கொள்கிறது" என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் பக்கத்தில் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

Sam Pitroda
சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

அதோடு நின்றுவிடாமல், தேர்தல் நேரமோ இல்லையோ, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊடகங்களில் பேசும்போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், தேர்தல் நேரமோ அல்லது இல்லையோ, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊடகங்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசுவது அவர்களின் கடமையாகும். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி உழைத்துக்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற சர்ச்சைகள் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாம் பித்ரோடா சர்ச்சைக்குரிய வகையில்பேசியிருப்பது இது முதல்முறையல்ல. அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள பரம்பரை சொத்து வாரிசுரிமை வரி மற்றும் சொத்து பகிா்ந்தளிப்பு நடைமுறைகள் குறித்து சாம் பித்ரோடா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தாா்.

Sam Pitroda
சாம் பித்ரோடா ராஜிநாமா!

அதாவது, ‘அமெரிக்காவில் உள்ள சட்டப்படி, வசதிவாய்ந்த நபா் உயிரிழக்கும்போது அவருடைய சொத்தில் குறிப்பிட்ட பங்கு மட்டுமே அவா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். சொத்தின் எஞ்சிய பங்கை அரசு எடுத்துக்கொள்ளும். இந்த நடைமுறை இந்தியாவிலும் அமல்படுத்துவது, பொது நலனுக்கு சிறந்ததாக அமையும்’ என்று கூறியிருந்தாா்.

சாம் பித்ரோடாவின் இந்தக் கருத்தை தோ்தல் பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, ‘காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான உள்நோக்கம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோா் கொடுத்த பரம்பரை சொத்தின் மீது வரி விதிப்பை அமல்படுத்தப்போவதாக தற்போது காங்கிரஸாா் தெரிவிக்கின்றனா்’ என்று விமா்சித்திருந்தார். தொடர்ந்து பாஜகவினர் இந்த பேச்சை சர்ச்சையாக்கி தேர்தல் பிரசாரங்கள் முழக்க ஒலிக்கச் செய்தனர்.

இப்போது, சாம் பித்ரோடா பேசியிருப்பது குறித்து தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தாக்கிப் பேசினார். தன்னை நேரடியாக சாம் பித்ரோடா தாக்கிப் பேசுவதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் நாட்டு மக்களின் நிறத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேலும், நாட்டு மக்களே இதற்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டும், நாட்டு மக்களை அவர்களது நிறத்தின் அடிப்படையில் பிரிப்பதை நாட்டு மக்களும் பிரதமர் மோடியும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று பேசினார்.

பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, மிகச் சிறந்த தேர்வாக இருந்தார். ஆனால் அவரை தோற்கடிக்க காங்கிரஸ் அதிகம் முயற்சித்தது ஏன் என்று நான் சிந்தித்திருக்கிறேன், தற்போதுதான் அதற்கான காரணம் எனக்குக் கிடைத்திருக்கிறது, அமெரிக்காவில் இருக்கும் இவரது மாமாதான், தனது சித்தாந்தங்களைக் கொண்டு ராகுலை வழிநடத்துகிறார், கிரிக்கெட் போட்டியில் எவ்வாறு மூன்றாவது நடுவர் இருப்பாரோ அதுபோல, ராகுலும் இந்த மாமாவிடம்தான் ஆலோசனை கேட்கிறார். இந்த சித்தாந்தவாதி கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லியிருப்பார், எனவே, நீங்கள் நாட்டில் உள்ள மக்களை அவர்களின் நிறத்தின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய்வது புரிகிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com