சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

விஜயவாடா தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி (4ஆம் கட்டம்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி
பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

அந்தவகையில் விஜயவாடா தொகுதியில் பிரதமர் மோடி வாகனப் பேரணி மேற்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பேரணி சென்ற வாகனத்தில் உடன் இருந்தனர்.

வழிநெடுக இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் மோடிக்கு வரவேற்பளித்தனர். தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகளின் தொண்டர்களும் கட்சி கொடிகளுடன் வாகனப் பேரணியில் பங்கேற்று ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com