இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

தெலங்கானாவின் பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.

News image
Updated On :8 மே 2024, 7:54 am

DIN

தெலங்கானாவின், பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தெலங்கானாவின் பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்புச்சுவர் அருகே கட்டட தொழிலாளர்கள் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழைக்கு தடுப்புச்சுவர் அருகே தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை மீது தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் 4 வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.