தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

4-ஆம் கட்ட தேர்தல்: மே.வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

News image

படம் | பி டி ஐ

Updated On :13 மே 2024, 3:20 pm

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(மே. 13) நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில், மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 75.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திர பிரதேசத்தில் 68.04 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 68.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் 35.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில், ஒட்டுமொத்தமாக 96 தொகுதிகளில் 62.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்குப்பதிவு சதவீத விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.