காஷ்மீர்: ஸ்ரீநகரில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு

காஷ்மீர்: ஸ்ரீநகரில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு
படம் | பி டி ஐ

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகர் உள்பட 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(மே. 13) நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதில் 62.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

படம் | பி டி ஐ

ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள 2,135 வாக்குச்சாவடிகளில் இரவு 8 மணி நிலவரப்படி 36.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் 14.43 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

மேலும், ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 25.86 சதவீதமும், 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 25.55 சதவீதமும், 2004-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 18.57 சதவீதமும், 1999-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 11.93 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக 1996-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 40.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com