
உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி - மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.
ஆனால், கட்டணம் செலுத்த மறுத்த கார் ஓட்டுநர் சுங்கச் சாவடி பெண் ஊழியரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். படுகாயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காசி சுங்கச் சாவடி மேலாளர் கூறியதாவது:
“தில்லியில் இருந்து வந்த கார் எங்கள் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். சுங்கக் கட்டணம் செலுத்தக் கோரிய எங்கள் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்றார். அவர் படுகாயமடைந்துள்ளார். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுங்கச் சாவடி ஊழியரிடம் இருந்து புகாரை பெற்றுள்ள மீரட் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.