தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

கேஜரிவால் தேசிய தலைநகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு பேரணி நடத்தவுள்ளார்.

News image

Delhi CM Arvind Kejriwal set to hold two roadshows for Congress candidates today

Updated On :15 மே 2024, 6:25 am

காங்கிரஸுடன் தனது முதல் கூட்டுத் தேர்தல் பிரசாரத்தில் தில்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தேசிய தலைநகரில் ஜஹாங்கிர்புரி, மாடல் டவுனில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு பேரணி நடத்தவுள்ளார்.

சாந்தினி சௌக்கில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெய் பிரகாஷ் அகர்வால், வடமேற்கு தில்லியில் உதித் ராஜ் மற்றும் வடகிழக்கு தில்லியில் கன்ஹையா குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கேஜரிவால் இன்று சாலை பேரணியை நடத்துவதாக தில்லி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் 3:4 என்ற விகிதத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் உள்ளனர். தில்லியில் உள்ள இந்தியா கூட்டணி தொகுதி உறுப்பினர்களிடையே மக்களவைத் தேர்தலுக்கான இடப்பகிர்வு ஒப்பந்தத்தின்படி, ஆம் ஆத்மி நான்கு இடங்களிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தனது இரண்டாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கன்ஹையா குமார், அதே தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பாஜகவின் மனோஜ் திவாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

சாந்தினி சௌக் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவீன் கண்டேல்வாலை எதிர்கொள்ளும் ஜெய் பிரகாஷ் அகர்வாலை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அகர்வால் இதற்கு முன்பு 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

மறுபுறம், பாஜகவின் யோகேந்திர சந்தோலியாவை எதிர்த்து வடமேற்கு தில்லியில் போட்டியிட உதித் ராஜை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. ராஜ் இதற்கு முன்பு 2014ல் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜ் 2019 இல் காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.