எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

32 ஆயிரம் மரங்களை வெட்டப் போகிறார்கள்! பெங்களூரில்...

பெங்களூருவில் புறநகர் ரயில்பாதை திட்டப் பணிகளுக்காக 32 ஆயிரம் மரங்கள் வெட்டப்படவுள்ளன.

News image
Updated On :16 மே 2024, 10:54 am

பெங்களூருவில் புறநகர் ரயில் பாதை திட்டப் பணிகளுக்காக 32,572 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதனை ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (கே-ரைட்) செயல்படுத்தவுள்ளது.

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் இணையாக 10 மரங்களை நட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து, ஜூன் 14ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

இக்கூட்டத்தில், 32,000-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

கே-ரைட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடையாளம் காணப்பட்ட மரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இருப்பிடங்களை வெளியிட்டுள்ளது. அதில், வெட்டத் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மரங்களில், 17,505 மரங்கள் புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) எல்லைக்கு அப்பால், தேவனஹள்ளியில் உள்ள அக்குபேட் டிப்போவில் உள்ளன.

இந்த மரங்களில் பெரும்பாலானவை யூகலிப்டஸ் மற்றும் அகாசியா மரங்களாகும். யூகலிப்டஸ் மரத்தை வெட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரியவந்துள்ளது.

4 வழித்தடங்களாக 148.1 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள ரயில்பாதை திட்டத்தில் மீதமுள்ள 15,067 மரங்களில், மொத்தம் 1,071 மரங்கள் பிபிஎம்பி எல்லைக்கு அப்பாற்பட்டவை. பிபிஎம்பி எல்லைக்குள் 13,996 மரங்கள் மட்டுமே இருப்பதாக கே-ரைட் நிறுவனம் கூறியது. இன்றுவரை, பிபிஎம்பி எல்லைக்குள் 2,098 மரங்களை வெட்டவும், 178 மரங்களை நடவும் அனுமதித்துள்ளனர்.

மரங்கள் பெருமளவில் அகற்றப்படுவதை அடுத்து, ஆன்லைன் மூலம் கருத்துக்கேட்பு மனுக்கள் பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மரங்கள் அழிப்பு நகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், மரங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கே-ரைட் நிறுவனத்துக்கு அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

1976-ஆம் ஆண்டு கர்நாடக மரம் பாதுகாப்புச் சட்டத்தை மனதில் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வெட்டப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெட்டப்பட்ட மரங்களை இடமாற்றம் செய்ய அல்லது அதற்கான இணையாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.