விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

News image
Updated On :17 மே 2024, 1:46 pm

DIN

தில்லியில் மக்களவைத் தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,தில்லி மாசுக் கட்டுபாட்டுக் குழு அலுவலகத்தில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

உலகில் உள்ள நகரங்களில் தில்லி மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. ”இந்தியா” கூட்டணி ஆட்சி அமைத்தால்,காற்று மாசு,ஆரவல்லி காடு வளர்ப்பு,யமுனை ஆறு செயல் திட்டம் புதுப்பித்தல் போன்ற ஐந்து சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் எனத் தெரிவித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி கேட்டபோது,அந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்காமல்,சுற்றுச்சூழல் பிரச்னைக்காக மட்டும் தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தபட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.