
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் சட்டவிரோத ஆள்சேர்ப்பு வழக்கில் கைது செய்யப்படுவதை எதிர்நோக்குவதாகவும், அவர் பாஜகவால் மிரட்டப்பட்டுள்ளார் என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அதிஷி கூறுகையில்,
ஸ்வாதி மாலிவால் முதல்வர் கேஜரிவாலை சந்திக்கப்போவதாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சந்திக்கச் சென்றுள்ளார். முதல்வரைச் சந்திக்க வருவதாக அவர் ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
முதல்வர் கேஜரிவால் அன்று வேறு பணியில் இருந்ததால் மாலிவாலை சந்திக்க இயலவில்லை. அதனால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அன்றைய தினம் முதல்வர் சந்தித்திருந்தால், பிபவ் குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கேஜரிவால் மீது சுமத்தியிருக்கலாம்.
ஊழல் தடுப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆள்சேர்ப்பு வழக்கில் ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்படலாம் என்ற கட்டத்தில் உள்ளது. பாஜக மாலிவாலை பயன்படுத்தி சதியின் முகந்திரமாக மாற்றியுள்ளது.
திங்களன்று கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாகவும், மார்பிலும் வயிற்றிலும் உதைத்ததாகவும் குற்றம் சாட்டினார். கட்சியில் இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
தில்லி காவல்துறை பாரபட்சமற்றதாக இருந்தால், மாலிவாலுக்கு எதிரான குமாரின் புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். மாலிவாலின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது போலவே அவரது புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலிவாலின் அலைபேசி அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, அவர் எந்த பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.