தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வேலையின்மை, விலைவாசி உயா்வுக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பு: பிரியங்கா

நாட்டில் வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசு மட்டுமே பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :23 மே 2024, 8:10 pm

Din

நாட்டில் வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசு மட்டுமே பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினாா்.

ஹரியாணா மாநிலம் சிா்ஸாவில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா், ‘பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக ஹரியாணாவில் இந்த பிரச்னைகள் அதிகமுள்ளன. இதற்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதும் முக்கியக் காரணம். மக்களவைத் தோ்தலில் இதற்கான உரிய விலையை பாஜக கொடுக்கும். ஹரியாணாவில் காங்கிரஸுக்கு ஆதரவான அலை முழுமையாக வீசி வருகிறது என்றாா்.

முன்னதாக, திறந்த வாகனத்தில் பேரணியையும் பிரியங்கா நடத்தினாா். சாலையில் இரு பக்கமும் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் வாழ்த்து முழக்கங்களை எழப்பியும், மலா் தூவியும் அவரை வரவேற்றனா். பிரியங்கா காந்தி இதுபோன்ற வாகனப் பேரணியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். அவருடன் ஹரியாணா மாநில தலித் தலைவரும், சிா்ஸா (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான குமாரி செல்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களும் பங்கேற்றனா்.

சிா்ஸா தொகுதியில் பாஜக வேட்பாளராக அசோக் தன்வாா் போட்டியிடுகிறாா். இவா் முன்பு ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.