மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: சசி தரூர்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சசி தரூர் கூறியுள்ளார்.

News image
Updated On :26 மே 2024, 7:55 am

DIN

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங்கை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது :

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். அதனால்தான் நான் சரண்ஜித் சிங்கிற்கு வாக்களிக்க சொல்கிறேன்.

ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பாஜக பிளவுப்படுத்த பார்க்கிறது. ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் பாஜாவினரால் பிரிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை பாஜக அவமதிக்கிறது.

பாஜக எந்தவொரு ஜனநாயக அமைப்பையும் விட்டு வைக்காது. நடுநிலையோடு இருக்கும் அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுத்து தன் பக்கம் இழுக்கும்.

ஊடகங்கள் அரசுக்கு எதிராக பேசினால் மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளிப்படையாக பேச முடியாத சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஏழாவது மற்றும் இறுதி கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.