400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

முதியோருக்கு ரூ. 2,000; கல்விக் கடன் ரத்து; 3 சிலிண்டர்கள் இலவசம்! அதிமுக வாக்குறுதி!

அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 12:52 pm IST

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

“அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.

ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஜன. 17 ஆம் தேதி முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவை, மகளிர் உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை, கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் சார்பில் நிலம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், 150 நாள்கள் வேலைத்திட்டம், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Summary

Rs. 2,000 for senior citizens; waiver of education loans; 3 free cylinders! AIADMK's promise!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.