கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாஜக தேசிய செயலரை கைது செய்து மகளை விடுவிக்க முயற்சி: கே.சந்திரசேகா் ராவ் மீது முன்னாள் காவல்துறை ஆணையா் குற்றச்சாட்டு

பாஜக தேசிய செயலரை கைது செய்து மகளை விடுவிக்க முயற்சி: கே.சந்திரசேகா் ராவ் மீது முன்னாள் காவல்துறை ஆணையா் குற்றச்சாட்டு

News image
Updated On :28 மே 2024, 8:18 pm

Din

ஹைதராபாத்: பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏக்களை பாஜகவில் இணையக் கோரி பேரம் பேசிய விவகாரத்தில் அக்கட்சியின் தேசிய செயலரை கைது செய்து மகள் கவிதாவுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற பாஜகவுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் அழுத்தம் கொடுக்க முயன்ாக முன்னாள் காவல்துறை துணை ஆணையா் பி.ராதாகிருஷ்ண ராவ் தெரிவித்தாா்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பி.ராதாகிருஷ்ண ராவ் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிஆா்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பேரம் பேசி பாஜகவில் இணைக்க அக்கட்சியின் தேசிய செயலரான சந்தோஷ் முயற்சி செய்தாா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒன்று அமைக்கப்பட்டது.

சந்தோஷை கைது செய்து தன் மகளும் பிஆா்எஸ் எம்எல்சியுமான கவிதா மீதான அமலாக்கத்துறை வழக்கை திரும்பப்பெறவைக்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க அப்போதைய முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் முயன்றாா். இந்நிலையில் சில காவல்துறை அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக இந்த வழக்கிலிருந்து ஒரு முக்கிய நபா் தப்பித்தாா். அதன்பின்பு இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சந்தோஷை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் எஸ்ஐடியிடமிருந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

கொடுத்த பணியை சரியாக முடிக்காததால் சந்திரசேகா் ராவ் மிகவும் கோபத்துடன் காணப்பபட்டாா் என தெரிவித்தாா்.

தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் ஆட்சியின்போது முக்கியப் பிரமுகா்களின் தொலைபேசியை ஒட்டுகேட்டல் மற்றும் கணினியில் உள்ள தரவுகளை அழித்த விவகாரம் தொடா்பாக ராதாகிருஷ்ண ராவ் கடந்த மாா்ச் மாதம் ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டாா்.