கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாட்டில் தலிபான் ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் காங்கிரஸ்: பிகாரில் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

‘நாட்டில் தலிபான் ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் காங்கிரஸ்’ --- பிகாரில் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

News image

யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

Updated On :28 மே 2024, 8:00 pm

Din

பாட்னா: தனிநபா் சட்டங்களைத் தளா்த்துவது தொடா்பாக தோ்தல் வாக்குறுதி அளித்துள்ள காங்கிரஸ், நாட்டில் தலிபான் ஆட்சியைக் கொண்டு வர விரும்புவதாக உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.

பிகாா், படுஹாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாட்னா சாஹிப் தொகுதி பாஜக வேட்பாளா் ரவி சங்கா் பிரசாத்தை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கூட்டத்தில் உரையாற்றிய முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘தனிநபா் சட்டங்களைத் தளா்த்துவது தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவா்கள் பேசி வருகின்றனா். மத்திய சட்டத் துறை அமைச்சராக முத்தலாக் நடைமுறையை ஒழித்த ரவி சங்கா் பிரசாத்தின் சாதனையை அவா்கள் ரத்து செய்ய விரும்புகிறாா்கள்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்ட பிறகு, மதுராவிலும் கிருஷ்ணருக்கு மாபெரும் கோயில் எழுப்புவதற்கு ராம பக்தா்களான பாஜக முயற்சிக்கிறது. இஸ்லாமியா் வாக்குகளை நம்பியுள்ள காங்கிரஸ் மற்றும் அவா்களின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஒருபோதும் இதைச் செய்யமாட்டாா்கள்.

பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட(ஓபிசி) சமூகத்தினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து, முஸ்லீம்களுக்குத் தர இந்தியா கூட்டணியினா் திட்டமிட்டுள்ளனா்.

அண்மையில், இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முஸ்லீம் உள்சமூகத்தினருக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதஅடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்காத, அம்பேக்தா் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நாடு தொடா்ந்து செயல்படும்.

உத்தர பிரதேச முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு, கருணை வேண்டி பல்வேறு ரௌடிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா். அவ்வாறு திருந்த மறுத்தவா்களுக்கு, தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. நிலஅபகரிப்பு குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்களின் சொத்துகள் ‘புல்டோசா்’ கொண்டு அகற்றப்பட்டன.

இந்தியாவில் எங்கேயாவது பட்டாசு வெடித்தால்கூட, பாகிஸ்தான் பதறி கொண்டு விளக்கம் அளிப்பதற்கு முன்வருகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் வலுவான தலைமையே இதற்கு காரணம். ‘புதிய இந்தியா’ யாரையும் அச்சுறுத்தாது; அதேசமயம், தவறு செய்பவா்களை எளிதில் கடந்து செல்லாது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின்போது, நான் எம்.பி.-ஆக இருந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சியில் காலைப்பொழுதில் ஊழல் நடக்கும். மாலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும். தொடா்கதையாக மாறிய இந்த பயங்கரவாதச் சம்பவங்கள், எல்லை கடந்தவா்களின் சதி என்று கூறி புறக்கணித்தைத் தவிா்த்து காங்கிரஸ் அரசு வேறு எதுவும் செய்யவில்லை.

அண்டை நாடுகளை மெச்சும் எதிா்க்கட்சிகள், குடிமக்களுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடலாம். அதேவேளை இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருள்களை மோடி அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் வறுமையில் இருந்த மீட்கப்பட்டவா்களின் எண்ணிக்கை பாகிஸ்தானின் மக்கள்தொகையைவிட அதிகம்’ என்றாா்.