கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முன்னாள் மேலாளா் கொலை வழக்கு: சாமியாா் குா்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு

முன்னாள் மேலாளா் கொலை வழக்கு: சாமியாா் குா்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு

News image

குா்மீத் ராம் ரஹீம் சிங்

Updated On :28 மே 2024, 7:46 pm

Din

சண்டீகா்: தனது முன்னாள் மேலாளா் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குா்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து தீா்ப்பளித்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில் குா்மீத் ராம் ரஹீம் சிங்கின் முன்னாள் மேலாளா் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தேரா சச்சா செளதா அமைப்பின் தலைமையகத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பெயரில்லாத கடிதம் வெளியானதில் ரஞ்சித்துக்குப் பங்கிருக்கலாம் என்று ராம் ரஹீம் சந்தேகம் கொண்டதாகவும், இதனால் ரஞ்சித்தை கொல்ல ராம் ரஹீம் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகவும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராம் ரஹீம் உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக ராம் ரஹீம் உள்பட 5 போ் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீதான வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்திருந்த நிலையில், ரஞ்சித் கொலை வழக்கில் இருந்து ராம் ரஹீம் உள்பட 5 பேரையும் விடுவித்து உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஏற்கெனவே பெண் சீடா்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2017-ஆம் ஆண்டு ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல ஊடகவியலாளா் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், 2019-ஆம் ஆண்டு அவா் உள்பட 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஹரியாணாவில் உள்ள ரோத்தக் பகுதி சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ளாா்.