காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி காலமானார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பீரன் சிங் எங்டி (வயது 81) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குவாஹட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலை காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பீரன் சிங் எங்டியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான திப்புவில் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பீரன் சிங் எங்டியின் மறைவுக்கு அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, அசாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ் கோகோய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1970-கள் முதல் திப்பு மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக 5 முறை பீரன் சிங் எங்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்துடன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Senior Congress leader and former Union Minister of State Biren Singh Engti has passed away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் தவறானது” - ஜோதிமணி எம்.பி.
முதல்வர் விஜய்யின் முதுகில் குத்த காங்கிரஸ் தயங்காது: தமிழிசை
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி
திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



