செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.

News image

PTI

Updated On :16 பிப்ரவரி 2026, 12:55 pm IST

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போரா தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைமையால் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநிலப் பிரிவில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.

2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸ் மாநிலத் தலைவராக போரா இருந்தார். கடந்த ஆண்டு அவருக்குப் பதிலாக கௌரவ் கோகோய் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ராஜிநாமா செய்த பூபென் குமார், இரண்டு முறை அசாமின் பிஹ்புரியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூபென் குமாரின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Summary

In a major jolt to the Congress ahead of the Assembly polls in Assam, the party's former state unit chief Bhupen Kumar Borah has resigned, according to sources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.