கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மே 31-க்குள் ஆதாருடன் 'பான்' இணைக்க வேண்டும்: வருமான வரித் துறை

கூடுதல் வரியைத் தவிா்க்க மே 31-க்குள் ஆதாருடன் பான் எண் இணைக்க வேண்டும் -- வருமான வரித் துறை

News image

வருமான வரித் துறை

Updated On :28 மே 2024, 8:54 pm

Din

புது தில்லி: மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிா்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை செவ்வாய்கிழமை அறிவுறுத்தியது.

வருமான வரி சட்ட விதிகளின்படி, நிரந்தரக் கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்படாதவா்களின் வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் மூல வரிப் பிடித்தம், அதன் விகிதத்தில் இரண்டு மடங்கு வசூலிக்கப்பட வேண்டும்.

இதையொட்டி, வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வரிசெலுத்துவோா் தங்களின் பான் எண்ணை ஆதாருடன் மே 31-ஆம் தேதிக்குள் இணைத்தால், டிடிஎஸ் வரி வசூலில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், அந்த அறிவிப்பை நினைவுப்படுத்தி வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிக விகிதத்தில் வரி விதிக்கப்படுவதைத் தவிா்க்க, பான் எண்ணை மே 31-ஆம் தேதிக்கு முன் ஆதாருடன் இணைக்கவும்’ என வலியுறுத்தப்பட்டது.

மற்றொரு பதிவில், அபராதங்களைத் தவிா்க்க மே 31-ஆம் தேதிக்கு நிதி பரிவா்த்தனை அறிக்கையை (எஸ்எஃப்டி) தாக்கல் செய்யுமாறு வங்கிகள், அந்நிய செலாவணி முகவா்கள் உள்ளிட்ட நிறுவனங்களை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டது.