19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கல்லூரி தேர்வறையின் வெளியே மாணவன் அடித்துக் கொலை! -ஒருவர் கைது

பாட்னா கல்லூரி வளாகத்தில் மாணவன் அடித்துக் கொலை!

Updated On :
கொல்லப்பட்ட மாணவன் ஹர்ஷ் ராஜ்

கொல்லப்பட்ட மாணவன் ஹர்ஷ் ராஜ் - படம் | பிகார் அமைச்சர் அசோக் சௌத்ரி எக்ஸ் தளப் பதிவு

பிகார் தலைநகர் பாட்னாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பாடப்பிரிவில் பயின்று வந்த 22 வயதான ஹர்ஷ் ராஜ், திங்கள்கிழமையன்று(மே 27) தேர்வு எழுதுவதற்காக சுல்தான்கஞ்ச்சில் அமைந்துள்ள சட்டக்கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கல்லூரி வளாகத்திற்குள் முகமூடி அணிந்தபடி புகுந்த கும்பல் ஒன்று, தேர்வறையில் இருந்து வெளியே வந்த மாணவனை அங்கிருந்த கடுமையாக அடித்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

அதில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த மாணவனை சக மாணவர்கள், உடனடியாக பாட்னா அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் ஹர்ஷ் ராஜ் உயிரிழந்தார்.

மாணவர் தாக்கப்படும் காட்சி

மாணவர் தாக்கப்படும் காட்சி - படம் | எக்ஸ் தளப் பதிவு

இந்த சம்பவம் குறித்து பாட்னா காவல்துறை ஆணையர் பரத் சோனி கூறியதாவது, “கடந்த ஆண்டு தசரா விழாவின் போது மாணவன் ஹர்ஷ் ராஜுக்கும் வேறு சில மாணவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மாணவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக” தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட மாணவனின் தந்தை, அங்குள்ள ஒரு பிரபல நாளிதழில் பத்திரிகையாளராக உள்ளார். இந்த நிலையில், தனது மகன் ஹர்ஷ் ராஜ், பாட்னா பல்கலைக்கழக கல்லூரி மாணவர் அமைப்பின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆயத்தமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதில் ஒரு நபரை கைது செய்திருப்பதாகவும், விரைவில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்றும், மாணவரின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை ஆணையர் பரத் சோனி தெரிவித்துள்ளார்.

மறுபுறம், மாணவன் ஹர்ஷ் ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது, சக மாணவர்களிடையே கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாட்னா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவன் ஹர்ஷ் ராஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் அசோக் சௌத்ரி, இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.