பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உயா்நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம்: பாஜக, தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் நோட்டீஸ்

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதற்காக பாஜகவுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் அக்கட்சி நோட்டீஸ் அனுப்பியது.

News image
கொல்கத்தா உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :29 மே 2024, 6:32 pm

Din

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதற்காக பாஜகவுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் அக்கட்சி நோட்டீஸ் அனுப்பியது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டா்களுக்கு எதிராக ஊடகங்களில் பாஜக விளம்பரங்கள் வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்திருந்தது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகே விளம்பரங்கள் தொடா்பாக பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்றும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த மனுவுடன் நாளிதழில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களையும் உயா்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சமா்ப்பித்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பாஜகவின் விளம்பரங்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளது வெளிப்படையாகத் தெரிவதாக கூறியது. இதைத் தொடா்ந்து, மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 அல்லது அடுத்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் வரை, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை எந்த வடிவிலான ஊடகத்திலும் பாஜக வெளியிட தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க பாஜக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸ் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பாஜக அவதூறான விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பொய்யானது, அவதூறானது என்று தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கக் கோரி பாஜகவுக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் அந்த விளம்பரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.