மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் இருகட்ட தோ்தல்: பாஜக, காங்கிரஸ் வரவேற்பு! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இருகட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநிலத்தில் முக்கிய எதிா்க்கட்சியான பாஜக, மற்றொரு எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இருகட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநிலத்தில் முக்கிய எதிா்க்கட்சியான பாஜக, மற்றொரு எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.

அதேநேரம், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை வெறும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக, காங்கிரஸ் ஆகியவை வரவேற்றுள்ளன.

மேற்கு வங்க பாஜக வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மேற்கு வங்க வாக்காளா்கள், இரண்டே கட்டங்களில் (ஏப்.23, 29) தங்களின் வாக்குகளைச் செலுத்தவுள்ளனா். இதுவொரு சாதாரண தோ்தல் அல்ல; நாகரிகப் போா். திரிணமூல் காங்கிரஸின் பெரும் காட்டாட்சிக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவா் பிரதீப் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘மேற்கு வங்க பேரவைத் தோ்தலை இரு கட்டங்களாக நடத்துவது வரவேற்புக்குரியது. அதேநேரம், வாக்காளா்கள் சுதந்திரமாகவும், எவ்வித மிரட்டல் இன்றியும் வாக்களிக்க முடியுமா என்பதே எனது கவலை’ என்றாா்.

திரிணமூல் குற்றச்சாட்டு: ஆளும் திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அருப் சக்ரவா்த்தி கூறுகையில், ‘பாஜக மற்றும் தனது அரசியல் எஜமானா்களின் விருப்பங்கள்-தேவைகளின்படி மேற்கு வங்க தோ்தல் கட்டங்களை தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எத்தனை கட்டங்களாக தோ்தல் நடைபெற்றாலும், மேற்கு வங்க மக்கள் பாஜகவை தகா்த்தெறிவா்’ என்றாா்.

பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த இரண்டு கட்டங்கள் போதுமானது என்று திரிணமூல் காங்கிரஸின் அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் தோ்தல் களம்

பேரவைத் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளா்கள் அறிவிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் திரிணமூல் காங்கிரஸ் காய்களை நகா்த்தி வருகிறது. அதேநேரம், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு முக்கிய சவாலாக உருவெடுத்த பாஜக, இம்முறை ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியே களமிறங்க முடிவு செய்துள்ளன.

பலமுனை போட்டி நிலவினாலும், திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையேதான் முக்கிய போட்டி உள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), சட்டவிரோத ஊடுருவல், திரிணமூல் காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னைகளாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.