ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிழக்கு தில்லி வாகன நிறுத்தத்தில் தீ விபத்து: 17 காா்கள் எரிந்து நாசம்

அதிருஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரவிக்கப்பட்டது.

News image
மது விஹாா் வாகன நிறுத்தத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் காா்கள். ~
Updated On :29 மே 2024, 7:21 pm

Din

கிழக்கு தில்லியின் மது விஹாரில் உள்ள வாகன நிறுத்தத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 காா்கள் தீயில் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிருஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரவிக்கப்பட்டது.

மது விஹாரில் மாநகாரட்சி சாா்பில் வாகன நிறுத்தம் ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூா் மக்கள் தங்கள் காா்களை வாடகை முறையில் இரவு நேரத்தில் இங்கு நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில், அந்த வாகன நிறுத்தத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மது விஹாரில் உள்ள வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக அதிகாலை 1.17 மணியளவில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, 9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் 4 மணி நேரத்துக்குப் பிறகு தீயை கட்டுக்கள் கொண்டு வந்தோம்.

இந்த விபத்தில் ஒரு எஸ்யூவி காா் உள்பட 17 காா்கள் எரிந்து நாசமாகின. வாகன நிறுத்தத்தில் உள்ள புதா் செடிகளுக்கு தீ வைக்கப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து; விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

சாந்தினி செளக்கில்...:

தில்லியின் வடக்கு பகுதியில் உள்ள சாந்தினி செளக்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் சேதமடைந்தன.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஃபதேபுரி மஸ்ஜித் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாலை 3.12 மணியளவில் தகவல் கிடைத்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. காலை 5 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா் அந்த அதிகாரி.

Story image