பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.
பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.
படம் | ஏஎன்ஐ

பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி தமது 3 நாள் தியானத்தை வியாழக்கிழமை (மே 30) தொடங்குகிறாா். மூன்று நாள்களும் விவேகானந்தர் பாறையிலுள்ள மையத்திலேயே பிரதமர் மோடி தங்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன், பிரதமர் மோடி மறைமுகமாக பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தியானம் செய்யவுள்ளதால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வியாழன், வெள்ளி, சனி (மே 30, 31, ஜூன் 1) ஆகிய 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மே 30 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வரும் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்குக் கன்னியாகுமரி வந்து இறங்குகிறார். மாலை 6.30 மணிவாக்கில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுத் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.10 மணிக்கு விமானப் படை விமானத்தில் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com