தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

யமுனை நதியில் தில்லியின் பங்கு ஹரியாணாவால் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

தலைநகர் தில்லிக்கு தண்ணீர் விடுவிக்காத விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்போவதாக தில்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

தில்லியில் வரலாறு காணாத கோடை வெப்பம் காரணமாக, நகரின் சில பகுதிகளில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆத் ஆத்மி அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!
நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

இந்த நிலையில், அமைச்சர் அதிஷி இன்று காலை வஜிராபாத் யமுனா நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தார். இங்கிருந்து வசிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் செல்கிறது. யமுனை நதியின் நீர்மட்டம் 674 அடியாக இருக்க வேண்டும். ஆனால் 670.3 அடியாக உள்ளது. இதனால் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், யமுனை நதியில் தில்லியின் பங்கு ஹரியாணாவால் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!
ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளேன். தில்லிக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்வதும் அவர்களின் பொறுப்பு. தில்லியின் தண்ணீரை நிறுத்த ஹரியாணாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் எக்ஸ் தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தண்ணீர் பிரச்னை தொடர்பாக தில்லி அரசு வியாழக்கிழமை(இன்று) அவசரக் கூட்டத்தை நடத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com