பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளப் பதிவு பற்றி...

ஐஃபோன் - கோப்புப் படம்

Published On :

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பெண்கள் அதிகளவில் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பெண்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். மின்னணு சாதனங்கள் உற்பத்தி பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள பல மின்னணு உற்பத்தி ஆலைகளில் பெண்கள் பாதிக்கும் மேல் பெருமளவில் பெண்கள் வேலை செய்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் பெருக்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் மட்டும் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், பயனடைந்தவர்களில் 70 %-க்கும் அதிகமானோர் பெண்கள் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஃபோன் உற்பத்தியை கடந்த 2025-ம் ஆண்டில் 53% உயர்த்தியது. முன்னர், ஆண்டிற்கு 3.6 கோடி யூனிட்களாக இருந்த உற்பத்தி 55 யூனிட்களாக மாறியுள்ளது.

உற்பத்தியை பெருக்குவதற்கும், சீனாவில் விதிக்கப்படும் வரிகளை தவிர்ப்பதற்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன்களின் முக்கிய பாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.

ஆண்டுதோறும் 220-230 மில்லியன் (23 கோடி) ஐஃபோன்கள் தயாரிக்கப்படும் நிலையில், அதில் இந்தியாவின் பங்கு சீராக உயர்ந்து வருகிறது. இதற்கு அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) கொள்கை காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஐஃபோன் 15 மற்றும் 16 போன்ற பழைய மாடல்கள் தொடர்ந்து உள்ளூர் சந்தையில் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகின்றன.

கடந்த 2025-ல் ஐஃபோன் இந்தியாவின் மிக விலையுயர்ந்த ஏற்றுமதி சாதனமாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர் (ரூ.1.91 இலட்சம் கோடி) மதிப்புள்ள சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இதில் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாவதாக தொழிதுறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய ஏற்றுமதி சந்தையில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 30 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், அதில் ஐஃபோன் ஏற்றுமதி 76% கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Over 1 lakh women employed in iPhone factories in India alone: Ashwini Vaishnaw

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.