பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

சிலிண்டர் தட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கிறது: மாநிலங்களவையில் கார்கே பேச்சு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பற்றி...

Mallikarjun Kharge raises concerns over LPG shortage in Rajya Sabha, Union Minister JP Nadda hits back at Congress

மாநிலங்களவையில் கார்கே... - ANI

Published On :

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

இன்றைய மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

"நாட்டில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பாதித்து வருகிறது.

தற்போதைய சூழலில், எல்பிஜி கிடைப்பதும், அதன் விலை நிலைத்தன்மையும் தீவிரமான பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. ஏனெனில் சில பகுதிகளில் அதிகமாக விலை கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்குகின்றனர். இதனால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், எல்பிஜி சிலிண்டருக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் கள நிலவரமோ அரசின் கூற்றுகளைத் தவறு என்றே நிரூபிக்கிறது" என்றார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, "இது பூஜ்ய நேரம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்திருக்க வேண்டும்; இதில் ஒருவர் 3 நிமிடங்களுக்குள் தனது பேச்சை நிறைவு செய்ய வேண்டும். இவ்விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்" என்று கூறினார். மேலும் நாட்டில் அமைதியை விரும்பும் மக்களை காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Summary

LoP Mallikarjun Kharge speaks on the LPG supply issue amid West Asia conflict

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.