கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

புல்லட் ரயில் திட்டம்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிடங்களில்...

சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

News image

புல்லட் ரயில் - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:43 pm IST

சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, "புல்லட் ரயில் நம் அனைவரின் கனவுத் திட்டம். இந்தச் சேவை, நமது பயண நேரத்தைக் குறைத்து, முக்கிய நகரங்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - PTI

புல்லட் ரயில் சேவையால், அமராவதி - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 70 நிமிடங்களாகக் குறைக்கப்படும். அமராவதி - சென்னை இடையேயான பயணமும் 112 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

ஹைதராபாத் - புணே இடையே 1 மணி 55 நிமிடங்களும், புணே - மும்பை இடையே 48 நிமிடங்களும், ஹைதராபாத் - பெங்களூரு இடையே 2 மணி 8 நிமிடங்களாகவும், அமராவதி - ஹைதராபாத் இடையே 70 நிமிடங்களும், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் 73 நிமிடங்களாகவும் இருக்கும். சென்னை - பெங்களூரு இடையேயான திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இந்த அதிவேக ரயில் சேவையானது, முக்கிய நகரங்களை இணைத்து, குறிப்பிடத்தக்க முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

Summary

Railway Minister Ashwini Vaishnaw shares Bullet train plan for South India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.