கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 அறிமுகம்! முக்கியமான 5 சிறப்பம்சங்கள்!

புதிதாக அறிமுகமான ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக்கின் சிறப்புகள் குறித்து...

News image

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 - படம் / நன்றி - ராயல் என்ஃபீல்டு

Updated On :4 ஜூன் 2026, 4:56 pm IST

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 650 இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ. 3.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் இருந்து விற்பனையில் களமிறங்கியுள்ள புல்லட் 650 வாகனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சக்திவாய்ந்த புல்லட்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 இருசக்கர வாகனத்தின் பேசுபொருளே 648சிசி என்ஜின்தான். ஆயில் குளிரூட்டியுடன் கூடிய டிவின் மோட்டார்.

இந்த என்ஜின் 47bhp மற்றும் 52Nm விசையை உருவாக்கும் திறன் கொண்டது. 6 வகையான ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் உடையது.

கிளாசிக் ஸ்டைல்

புல்லட் வாகனங்களுக்கே உரித்தான கிளாசிக் வடிவமைப்பை புல்லட் 650 கொண்டுள்ளது. கைகளில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. மெட்டல் பேட்ஜ், துளிகள் வழிந்தோடும் வகையிலான பெட்ரோல் டேங்க் வடிவம், வட்ட வடிவ முகப்பு விளக்கு போன்றவை கிளாசிக் அனுபவத்தை வழங்கக் கூடியவை.

கிளாசிக் 650 விலை

புல்லட் கிளாசிக் 650 இருசக்கர வாகனத்தின் ஆரம்ப விலைக்கு மிக அருகில் புல்லட் 650 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 3.65 லட்சம் என்பது கிளாசிக் வகை பைக்குகளின் ஆரம்பகட்ட விலை அளவில் உள்ளது.

இதனால் டிவின் சிலிண்டர் ராயல் என்ஃபீல்டு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதோடு மட்டுமின்றி கிளாசிக் 650ஐ விட, புல்லட் 650 மிகச்சிறந்த சீட் அமைப்பை உடையது.

650சிசி அமைப்பு

இரண்டு புகைப்போக்கிகள் உடைய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் இரு டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் இரட்டை சஸ்பென்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கம் 19 அங்குல ஸ்போக் சக்கரமும், பின்புறம் 18 அங்குல ஸ்போக் சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரட்டை வண்ணங்கள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 இரு வண்ணங்களில் கிடைக்கின்றன. கெனான் கருப்பு, நீலம் என இரு வண்ணங்களும் கிளாசிக் தன்மையை கொடுக்கக் கூடியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.