வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஒன்பிளஸ், ஐகியூ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஷாவ்மியின் 17டி அறிமுகம்!

ஐகியூ 15 ஆர் மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக ஷாவ்மி அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் குறித்து...

News image

ஷாவ்மி 17டி - படம் / நன்றி - ஷாவ்மி

Updated On :4 ஜூன் 2026, 3:59 pm IST

ஷாவ்மி நிறுவனத்தில் புதிதாக 17டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஐகியூ 15 ஆர் மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக இந்த புதிய ஸ்மார்ட்போனை ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.

8500 அல்ட்ரா சிப்செட், அதீத பேட்டரி, ஜூம் லென்ஸ் போன்றவை ஷாவ்மி 17டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் புதிதாக ஷாவ்மி 17டி அறிமுகம் செய்துள்ளது.

12GB உள்நினைவகம் (RAM) 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 59,999.

12GB உள்நினைவகம் 512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 64,999.

வங்கிக் கடன் அட்டை மூலம் ரூ. 5000 சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி 17டி சிறப்பம்சங்கள்

  • ஷாவ்மி 17டி ஸ்மார்ட்போன் 6.59 அங்குல திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா புராசஸர் உடையது.

  • ஹைப்பர் ஓஎஸ் 3 இயங்குதளம் கொண்டது.

  • டால்பி ஸ்பீக்கர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

  •  50MP முதன்மை கேமரா,  50MP டெலிபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 6,500mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 67W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

Summary

Xiaomi 17T launched in India to rival iQOO 15R and OnePlus 15R

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.