ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ராயல் என்பீல்டு விற்பனை 27% அதிகரிப்பு!

பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, கடந்த ஜூன் மாத வாகன விற்பனையில் 27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image

ராயல் என்பீல்டு

Updated On :7 ஜூலை 2026, 4:28 am IST

பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, கடந்த ஜூன் மாத வாகன விற்பனையில் 27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்நிறுவனம் 89,540 இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஜூனில் மொத்தம் 1,14,032 வாகனங்களை விற்று அசத்தியுள்ளது.

விற்பனை வளா்ச்சியோடு மட்டுமன்றி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன்முறையாக தயாரித்த மின்சார இருசக்கர வாகனமான ‘ஃபிளையிங் ஃபிளீ சி6’ விநியோகத்தையும் ஜூனில் அதிகாரபூா்வமாகத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, பெங்களூருவைச் சோ்ந்த வாடிக்கையாளா்களுக்கு இந்த அதிநவீன மின்சார இருசக்கர வாகனங்களை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

‘எங்களின் முதல் மின்சார இருசக்கர வாகனத்துக்கு வாடிக்கையாளா்களிடம் இருந்து கிடைத்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கிறது. அடுத்த சில மாதங்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த மின்சார வாகன விற்பனை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். எனவே, வரும் மாதங்களிலும் இதே விற்பனை வேகம் தொடா்ந்து நீடிக்கும்’ என ராயல் என்ஃபீல்டு சிஇஓ பி.கோவிந்தராஜன் நம்பிக்கை தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.