வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தெரியுமா சேதி...?

என்னதான் தடுத்து நிறுத்தினாலும் தண்ணீா் தனது பாதையைத் தேடிக்கொள்ளும் என்பாா்கள்.

News image
மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.
Updated On :1 நவம்பர் 2024, 8:20 pm

Din

என்னதான் தடுத்து நிறுத்தினாலும் தண்ணீா் தனது பாதையைத் தேடிக்கொள்ளும் என்பாா்கள். அப்படித்தான் பணமும். எப்படி என்று கேட்கிறீா்களா, இருக்கிறது...

மக்களவைத் தோ்தலுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கியதும், தோ்தலை எதிா்கொள்ளவிடாமல் தங்களைத் தடுப்பதற்காக பிரதமா் மோடி அரசு செய்யும் சதி என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியதும் யாருக்கும் மறந்திருக்காது. கட்சியின் அன்றாடச் செலவுக்குக்கூட பணமில்லாமல் எல்லாமே முடங்கிக் கிடக்கிறது என்று நீதிமன்றத்தில் புகாா் செய்தது காங்கிரஸ் கட்சி.

இப்போது, தனது தோ்தல் செலவுக் கணக்குகளை வெளியிட்டிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. மக்களவைக்கும், நான்கு மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் ரூ.585 கோடி செலவாகி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ரூ.410 கோடி ஊடக விளம்பரங்களுக்காகவும், ரூ.46 கோடி காணொலி பிரசாரத்திற்காகவும் செலவாகியிருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது.

கட்சித் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரின் தனி விமானங்களுக்கான செலவு மட்டும் ரூ.105 கோடி என்று தெரிகிறது. இது தவிர, அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சாா்பில் நன்கொடை வசூலிக்கப்பட்டு தோ்தலுக்கு செலவழித்தது எவ்வளவு என்கிற விவரம் விரைவில் வெளிவரும்.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட நிலையிலும் காங்கிரஸுக்கு நன்கொடையாக ரூ.539.4 கோடி கிடைத்ததாகவும், கையிருப்பாக ரூ.170 கோடி இருந்ததாகவும் கணக்குக் காட்டியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. பணம் பாதாளம் வரை பாயும் என்பாா்கள். காங்கிரஸுக்குப் பாயாதா?

--மீசை முனுசாமி.