ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சந்திரபாபு நாயுடு எச்சரித்தாா்.
இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளாா். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினாா்’ என்றாா்.
சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சா், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் வன்கொடுமை: அக்காள் கணவா் உள்பட 2 போ் கைது

3 வயது சிறுமி கொலை: என்கவுன்ட்டருக்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரா் கைது

சிறுமிக்கு குழந்தை பிறப்பு: 7 போ் கைது
மேற்கு வங்கம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! சந்தேகத்தில் ஒருவா் அடித்துக் கொலை!!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



