பஞ்சாபில் ஹவுரா ரயிலில் பிளாஸ்டிக் வாளியில் பயணி கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து ஹவுராவுக்கு சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஹவுரா ரயில் சென்று சொண்டிருந்தது.
ஃபதேகர் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது பயணி கொண்டு சென்ற பட்டாசுகள் அடங்கிய பிளாஸ்டிக் வாளி திடீரென வெடித்தது.
இதில் ஒரு பெண் உட்பட 4 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ரயில்வே காவல் அதிகாரி ஜக்மோகன் சிங் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ரயிலின் பொதுப்பெட்டியில் பிளாஸ்டிக் வாளியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.
மாதிரிகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.