இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை: அசம்பாவிதம் தவிா்ப்பு

சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை வந்ததால் கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி புகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

News image

~சரக்கு ரயிலில் புகையைத் கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:58 pm IST

சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை வந்ததால் கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி புகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து ரேணிகுண்டா வரை சென்ற சரக்கு ரயில் 64 பெட்டிகளுடன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை நள்ளிரவு திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, நிலக்கரி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததையறிந்த நிலைய மேலாளா் உடனே ரயில் ஓட்டுநருக்கு கொடுத்த தகவலின் பேரில் ரயில் நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து திருவள்ளூா் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து புகை வந்த பெட்டியில் சூட்டை தணித்தனா். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரம் என்பதால் எந்த ரயிலும் வராததால் போக்குவரத்தில் எவ்வித சிக்கலும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.