டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்

தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து...

News image

தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:40 pm IST

காவிரி நீர் பிரச்னை, மேக்கேதாட்டு விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் ஆநீதியை கண்டித்து தில்லிக்கு போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் ஆநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்(ஆக 4) தில்லியில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கத்தினர் தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரம் வழியாக தில்லி சென்றுள்ளனர். அப்போது, மகாராஷ்டிரத்தின் பாதிவழியில் அந்த மாநில போலீசார் தமிழக விவசாயிகளை நாக்பூர் ரயில்நிலையத்தில் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்களா என்ற தகவல் தெரியவில்லை.

தில்லிக்கு ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரம் மாநில போலீஸாா் நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு வலுகட்டாயமாக தமிழகத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தமிழக விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Tamil Nadu farmers traveling by train to stage a protest in Delhi were stopped in Nagpur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.