மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: ஒமர் அப்துல்லா கண்டனம்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

ஒமர் அப்துல்லா

Updated On :3 நவம்பர் 2024, 5:20 pm IST

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிளே மார்க்கெட் அருகே உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழியை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 12 பொதுமக்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், கடைக்காரர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்தனர்.

சனிக்கிழமை லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் விரக்தியில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரி கூறினார்.

இந்த தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.