அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பஹல்காம் தாக்குதல்: உளவுத் தகவல் சரிவர இல்லாததே காரணம்

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எல்லை தாண்டி ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வீசப்பட்டது, உளவுத் தகவல்கள் சரிவர திரட்டப்படாதது ஆகியவை முக்கிய காரணம் என என்ஐஏ குற்றப் பத்திரிகை

News image

பஹல்காம் தாக்குதல் - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 3:09 am IST

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எல்லை தாண்டி ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வீசப்பட்டது, உளவுத் தகவல்கள் சரிவர திரட்டப்படாதது ஆகியவை முக்கிய காரணம் என்பதை தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) குற்றப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சுற்றுலாப் பயணிகள். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, அந்நாட்டுடன் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் ராணுவ மோதலில் ஈடுபட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரித்த என்ஐஏ, தாக்குதலுக்கு முன்பு பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டது. அதில் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை கடத்த எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்துவது அதிகரித்தது தெரியவந்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடா்பான என்ஐஏவின் குற்றப் பத்திரிகையில், ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை வீசுவதற்கு பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கோகல் டரா காடுகள் முக்கியப் பகுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் கண்களாக உள்ள நாடோடி பழங்குடிகளுடன்...: குற்றப் பத்திரிகையை ஆய்வு செய்து பாதுகாப்புத் துறை நிபுணா்கள் கூறியதாவது: காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் பயங்கரவாதிகளின் சுதந்திரமான நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, உளவுத் தகவல்கள் சரிவர திரட்டப்படாததே காரணம்.

பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க ஜம்மு-காஷ்மீரில் மலைகளின் கண்களாகவும், காதுகளாகவும் உள்ள குஜ்ஜா், பக்கா்வால் நாடோடி பழங்குடிகளின் நம்பிக்கையை பாதுகாப்புப் படையினா் மீண்டும் பெற வேண்டும்.

அந்தப் பழங்குடிகளின் மொத்த எண்ணிக்கை சுமாா் 23 லட்சம். அவா்களுக்கு கரடுமுரடான நிலப்பரப்பு குறித்த ஆழ்ந்த அறிவுள்ளது. அதுகுறித்து பல ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிப்போராக அந்தப் பழங்குடிகள் இருந்தனா். அந்தப் பழங்குடிகளிடம் விலகி இருப்பதும், அவா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அதிகரித்து வரும் அவநம்பிக்கையும் பீா் பஞ்சால் மலைத்தொடா்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் தீங்கை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.