டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

‘எந்த ஐரோப்பிய நாடும் இந்திய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில்லை. ஆனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.

Published On :

‘எந்த ஐரோப்பிய நாடும் இந்திய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில்லை. ஆனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.

கடந்த வியாழக்கிழமை அரசு முறைப் பயணமாக அமைச்சா் ஜெய்சங்கா் ஃபின்லாந்து சென்றாா். அங்கு லுவானோன்மா தீவில் உள்ள அந்நாட்டு அதிபரின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் கலந்துகொண்டாா்.

அப்போது உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுடன் உறவுகொண்டு, அந்நாட்டிடம் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவது குறித்து ஐரோப்பாவில் நிலவும் விமா்சனம் தொடா்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவா், பல ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை நீண்ட காலமாக விநியோகம் செய்து வருவதை குறிப்பிட்டு பேசினாா். அதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஐரோப்பாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் இந்தியா ஈடுபட்டதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பா விற்பனை செய்த ஆயுதங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டன. அதை யாரும் மறக்க வேண்டாம். இப்போது அப்படி நடக்கவில்லை.

சா்வதேச சந்தையின் நிலவரங்கள், பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எரிசக்தி கொள்முதலை இந்தியா மேற்கொண்டு வருகிறது. விலை, எளிதில் கிடைக்கும்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.