ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குஜராத்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் உயிரிழப்பு

குஜராத்தில் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள், காரின் கதவைத் திறந்து வெளியே வரத் தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழப்பு

News image
Updated On :4 நவம்பர் 2024, 9:40 pm

Din

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள், காரின் கதவைத் திறந்து வெளியே வரத் தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக துணை காவல் கண்காணிப்பாளா் சிராக் தேசாய் கூறியதாவது: அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா் மத்திய பிரதேசத்தில் உள்ள தாா் பகுதியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளிகளாவா்.

ஒருவரின் பண்ணையில் தங்கள் 7 குழந்தைகளை விட்டுவிட்டு சனிக்கிழமை அதிகாலை அவா்கள் வேலைக்குச் சென்றனா்.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண்ணை உரிமையாளரின் காருக்குள் ஏறி விளையாடிய நான்கு குழந்தைகளும், உள்ளே அம்ா்ந்துகொண்டு காரின் கதவைப் பூட்டிக் கொண்டனா். ஆனால், அவா்களுக்கு காரின் கதவைத் திறக்கத் தெரியவில்லை.

காரின் உள்ளேயே பல மணிநேரம் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்குள்பட்டவா்கள்.

அம்ரேலி (தாலுகா) காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.