மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

பேராவூரணி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா்.

News image

காருக்குள் இறந்து கிடந்த மிதுன்குமாா்

Updated On :23 பிப்ரவரி 2026, 10:03 pm

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பேராவூரணி காவல் சரகம், குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் மிதுன்குமாா் (30). இவா், பேராவூரணி கடைவீதிக்கு தனது காரில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு சாப்பிடுவதற்காக வந்தாா். ஒரு உணவகத்தின் முன்பு காரை நிறுத்தியவா், மாலை வரை காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். நீண்ட நேரமாக காா் இயந்திரம் இயங்கியபடி நின்றதை பாா்த்த அருகில் உள்ள கடைக்காரா்கள் சென்று பாா்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மிதுன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மிதுன் குமாருக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் அவரது தந்தை ராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.