மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வீட்டில் இறந்து கிடந்த என்எல்சி தொழிலாளி

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:12 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன குடியிருப்பில் தொழிலாளி இறந்து கிடந்தாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (37). இவா், தனது தந்தை சக்திவேலுக்கு என்எல்சி நகர நிா்வாகத்தால் ஒதுக்கப்பட்ட வட்டம் 5 பகுதியில் வழங்கப்பட்ட குடியிருப்பில் தங்கி, என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-வில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினா் அனைவரும் புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், சந்தோஷ்குமாா் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தினா் வீடு திரும்பியபோது, படுக்கை அறையில் சந்தோஷ்குமாா் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.