ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தரகண்ட்: பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 பேர் பலி!

200 அடி பள்ளத்தில் 40 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து.

News image
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.- படம்: பிடிஐ
Updated On :4 நவம்பர் 2024, 6:25 am

DIN

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் திங்கள்கிழமை காலை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், கார்வாலில் இருந்து குமாவோனுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டபோது, 40 பயணிகள் பேருந்தில் இருந்ததாகவும், இதுவரை 20 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் காவல்துறையும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த செய்தி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகாமையில் இருக்கக் கூடிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும், தேவைப்பட்டால் படுகாயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.