ஒடிஸாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் சில குண்டுகள் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துச் சென்றன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற செயல்களில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வந்தனா். இப்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறியதாவது: தில்லி ஆனந்த் விஹாா்- ஒடிஸாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில் ஒடிஸாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டது. அடுத்த 5 நிமிஷங்களில் பௌத்பூா் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினா். சில குண்டுகள் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன. இதனால், பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனா். அதிருஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். சம்பவம் குறித்த தகவல் கிடைத்த ரயில் பாதுகாப்புப் படையினா் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், ரயில் கூடுதல் பாதுகாப்புடன் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

துப்பாக்கி குண்டு துளைத்த ரயிலின் கண்ணாடி ஜன்னல் .
சம்பவம் நடந்த பகுதி மக்களிடம் மாநில காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்

குன்னூா் மலைப் பாதையில் ஓடும் காரில் தீ

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


